search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளை பல் துலக்க வைக்க ஒரு பாடல்
    X
    குழந்தைகளை பல் துலக்க வைக்க ஒரு பாடல்

    குழந்தைகளை பல் துலக்க வைக்க ஒரு பாடல்

    10 குழந்தைகளில் 7 பேர் தினமும் இரண்டு முறை பல் துலக்குவதில்லை. அதனால் குழந்தைகளில் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் பல் சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.
    குழந்தைகளை ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்க ஊக்குவிக்க தூண்டும் வகையிலான விழிப்புணர்வு பாடலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) குழந்தைகள் மற்றும் பல் பாதுகாப்புத்துறை உருவாக்கி உள்ளது. இனிமையான இசையுடன் இரண்டு நிமிடங்கள் ஒளிபரப்பாகும் அந்த பாடலில் வாய்வழி சுகாதார நடைமுறைகள் பற்றிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

    பல் துலக்குதல், பல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் குறிப்புகள், பெண்கள் கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வாய்வழி சுகாதாரம் சார்ந்த விஷயங்கள், பற்களின் பாதுகாப்பு பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், அதற்கான பதில்கள் என ஏராளமான தகவல்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதற்காக `ஹெல்த்தி ஸ்மைல்’ என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    இது குறித்து எய்ம்ஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘முறையாக பல் துலக்காதது, தவறான உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பது போன்றவை காரணமாக பல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரிக்கின்றன.

    60 சதவீதத்திற்கும் அதிகமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் வாய்வழி சுகாதார பிரச்சினைகள் பற்றி அறிந்திருக்கவில்லை. 10 குழந்தைகளில் 7 பேர் தினமும் இரண்டு முறை பல் துலக்குவதில்லை. அதனால் குழந்தைகளில் சுமார் 40 முதல் 50 சதவீதம் பேர் பல் சார்ந்த பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். எனவே பல் சுகாதாரத்தை பேணும் நோக்கோடு இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கிறோம்’’ என்கிறார்கள்.
    Next Story
    ×