search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்
    X
    குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்

    குழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்

    சித்த மருந்துகளால் குழந்தைகளுக்கு வரும் பிரச்னைகளையெல்லாம் சரி செய்து விட முடியும். குழந்தைகளின் எந்த நோய்க்கு எந்த மூலிகையை பயன்படுத்த வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
    * காய்ச்சலுக்கு நிலவேம்பு, துளசி குடிநீர்.
    * இருமலுக்கு ஆடாதோடைக் குடிநீர்.
    * சளியுடன் கூடிய இருமலுக்கு கற்பூரவள்ளி இலை.
    * நீரேற்றம் விலக மஞ்சள் புகையை மோந்து பார்த்தல்.
    * ஈளை, இருமலுக்கு முசுமுசுக்கை அடை, கண்டங்கத்தரி இலைக் கசாயம்.
    * மலச்சிக்கல் தீர நிலாவரைப் பொடி
    * வாய்நாற்றம், விக்கல் தீர தனியா விதை
    * வாந்தி, சுவையின்மை தீர நெல்லித் துவையல்.
    * கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
    * பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
    * பல் முளைக்கும்போது உண்டாகும் கழிச்சலுக்குத் திராட்சைப் பழச்சாறு.
    * சொறி,சிரங்கு சரியாக குப்பைமேனி இலையுடன் உப்புச் சேர்த்து அரைத்துப் பூச வேண்டும்.
    * நீர் எரிச்சல் தீர நன்னாரி ஊறல் நீர்
    * வியர்க்குரு விலகப் பனை நுங்கு நீர்
    * கண் நோய்க்கு பொன்னாங்கண்ணிக் கீரைக் கடைசல்.
    * உடல் உறுதிபெற செவ்வாழைப்  பழம்.
    * பல் துலக்க ஆலம் விழுது, கருவேலங்குச்சி
    * குளியலுக்கு நலுங்குமாவு.

    நம் நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் மட்டுமல்ல. இக்காலக் குழந்தைகள் வாழ்விலும் உள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தகுந்த ஆரோக்கியமான வாழ்வைத் தர வேண்டியது நமது கடமையாகும்.  
    Next Story
    ×