search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    உலக கோப்பை கால்பந்து- 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி
    X

    உலக கோப்பை கால்பந்து- 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் அணி தகுதி

    • 64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது.

    கார்டிப்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 21-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வர ஆசிய கண்டத்தில் உள்ள கத்தாரில் நடக்கிறது.

    இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் கத்தார் மட்டும் நேரடியாக விளையாடுகிறது. மற்ற நாடுகள் தகுதி சுற்று மூலமே முன்னேறி இருந்தன.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 3 நாடுகள் தகுதி பெற வேண்டி இருந்தது.

    இந்த நிலையில் ஐரோப்பா கண்டத்தில் இருந்து வேல்ஸ் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

    கார்டிப் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வேல்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் உக்ரைனை வீழ்த்தியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியது.

    மார்ச் மாதம் நடைபெற வேண்டிய போட்டி தற்போது நடந்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது.

    ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் வேல்ஸ் கேப்டன் காரெத் பாலே இந்த கோலை அடித்தார்.

    64 ஆண்டுகளுக்கு பிறகு வேல்ஸ் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 1958-ம் ஆண்டு முதல் முறையாக முன்னேறி இருந்தது.

    வேல்ஸ் அணி 'பி' பிரிவில் இருக்கிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, ஈரான் ஆகிய நாடுகளும் அந்த பிரிவில் உள்ளன.

    உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இன்னும் 2 நாடுகள் தகுதி பெற வேண்டி உள்ளது.

    Next Story
    ×