என் மலர்
ஆசிரியர் தேர்வு

சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலம்
- சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
- சாமி சிலைகளுடன் ஜெயின் சமுதாய மக்கள் ஊர்வலமாக சென்றனர்.
மதுரை
மதுரை மேல கோபுரவீதி யில் ஜெயின் கோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெறுகிறது.
இதையொட்டி எல்லீஸ் நகர் மேம்பாலத்தின் அடியில் உள்ள பிரம்மாண்ட மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. உற்சவ மூர்த்திகள் வீதி உலா, ஜான்சி ராணி பூங்காவில் இருந்து இன்று காலை தொடங்கியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக வந்தனர்.அவர்கள் மேல ஆவணி மூல வீதி, நேதாஜி ரோடு, பெரியார் பஸ் நிலையம் வழியாக எல்லீஸ் நகரில் உள்ள அயோத்தியா நகரை வந்தடைந்தனர். இந்த ஊர்வலத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
Next Story