என் மலர்
வழிபாடு

திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்ப்பது ஏன்?
- காலம் காலமாக நடைமுறையில் உள்ள நம்பிக்கை.
- திருமணத்தை முடிவு செய்வதற்கான முதல் படியே அதுதான்.
ஜாதக பொருத்தம் பார்ப்பது என்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ள ஒரு பெரும்பான்மை நம்பிக்கை. தம் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை சிறக்க வேண்டும் என்ற பெற்றோர்களின் இயல்பான ஆசையின் எதிர்பார்ப்புதான் இந்த ஜாதக பொருத்தம். இந்தியாவில் பெரும்பாலான திருமணங்கள் ஜாதகம் பார்த்துதான் நடக்கின்றன. ஆண், பெண் ஜாதகம் பொருந்தும் போது, திருமணம் முடிவு செய்யப்படுகிறது. குறிப்பாக திருமணத்தை முடிவு செய்வதற்கான முதல் படியே அதுதான். ஜாதக பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமண பேச்சுவார்த்தையே தொடங்குகிறது.
திருமணம் என்பது இரு மனங்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் அல்ல. இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதில் நாம் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததாக இல்லாமல் பொருத்தம் பார்க்கும்போது எந்தெந்த பொருத்தங்கள் முக்கியமானதாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் முக்கியமாகப் பார்க்கவேண்டிய பொருத்தங்கள் எவை என்பது குறித்து ஜோதிடம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
தினப்பொருத்தம்:
ஓர் பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்தில் இருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது, 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24 ஆக அதன் எண்ணி க்கை இருந்தால், தினப்பொருத்தம் இருக்கிறது என்று பொருள். தினப்பொருத்தம் இருந்தால்தான் தம்பதிகள் மன ஒற்றுமையுடன் வாழ்வார்கள்.
கணப்பொருத்தம்:
மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களும் தேவ கணத்தில் இருந்தால், கணப்பொருத்தம் கன கச்சிதம். இருவரின் நட்சத்திரங்களும் மனித கணத்தில் இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு.
மகேந்திரப் பொருத்தம்:
புத்திரப் பாக்கியத்தைக் குறிக்கக்கூடிய பொருத்தம் மகேந்திரப் பொருத்தமாகும். பெண் நட்சத்திரத்திலிருந்து ஆண் நட்சத்திரம் வரை எண்ணி வரும்போது 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக அந்த எண்ணிக்கை இருந்தால் மகேந்திரப் பொருத்தம் இருக்கிற தென்று நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம்:
பெண்ணின் ஜன்ம நட்சத்திரத்திலிருந்து ஆணின் ஜன்ம நட்சத்திரம் வரை எண்ணி னால், 13-க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் பொருத்தம் இருக்கி றது எனக் கொள்ள வேண்டும்.
யோனிப் பொருத்தம்:
திருமண வாழ்வில் இணைந்தபின் தம்பதியிடையே நிலவும் இல்லறம் பற்றி கூறும் பொருத்தம் யோனிப் பொருத்தம். ஒவ்வொருவரின் நட்சத்திரத்துக்கும் ஒரு விலங்கினம் குறிக்கப்படுகிறது. ஒன்றுக்கு ஒன்று பகை இல்லாத விலங்கினங்களைச் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.
ராசிப் பொருத்தம்:
பெரும்பாலும் ராசிப் பொருத்தம் மட்டுமே பார்த்து திருமணம் செய்யும் நடைமுறை இன்றளவும் பல குடும்பங்களில் உள்ளது. பெண்ணின் ராசி மேஷம் என்றால், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் அமையும் சித்திரை முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்களுக்கு ராசிப் பொருத்தம் உண்டு.
ராசி அதிபதி பொருத்தம்:
நவகிரகங்களில் ராகு, கேது தவிர்த்து மீதமுள்ள 7 கிரகங்களும், 12 ராசிகளுக்கும் அதிபதிகளாகத் திகழ்கின்றனர். இந்த கிரகங்கள் ஒருவருக்கொருவர் நட்பு, சமநிலை, பகை என்னும் மூன்று நிலைகளில் இருப்பார்கள்.
ஆணின் ராசி அதிபதியும் பெண்ணின் ராசி அதிபதியும் நட்பு அல்லது சம நிலை என்னும் அளவில் அவர்களின் உறவு இருக்க வேண்டும். இப்படி இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு.
வசியப் பொருத்தம்:
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது வசியப் பொருத்தம் பார்ப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும். ஆண், பெண் இருவரும் ஒருவரை மற்றவர் அனுசரித்துச் செல்லும் மனோபாவத்துக்குக் காரணமாக அமையும்.
ரஜ்ஜு பொருத்தம்:
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு ரஜ்ஜு உண்டு. இதை கயிறு பொருத்தம் என்றும் கூறுவார்கள். சிரசு ரஜ்ஜு, கண்ட ரஜ்ஜு, நாபி ரஜ்ஜு, தொடை ரஜ்ஜு,பாத ரஜ்ஜு என ஐந்து வகை ரஜ்ஜு உண்டு. ஆண், பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருக்கக்கூடாது. எனவே, முக்கியப் பொருத்தமாக ரஜ்ஜு பொருத்தம் பார்க்கப்படுகிறது.
வேதைப் பொருத்தம்:
வேதை என்றால் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று பொருள். பரஸ்பரம் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்ளும் தன்மை உள்ளவை. இதுவும் மிக முக்கியமாகப் பார்க்க வேண்டிய பொருத்தமாகும்.
எனவே இந்தப் பொரு த்தங்கள் இருக்கின்றனவா என்று நன்கு பார்த்த பிறகே திருமணம் செய்ய வேண்டும். இப்படி அமையும் திருமண வாழ்வில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது என்பதே ஜோதிடம் கூறுவதோடு நம் நம்பிக்கையும் அதுதான்.






