என் மலர்
வழிபாடு

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா
- இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
- நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.
இதற்காக கோவிலுக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.
மேலும் நவராத்திரி விழா காலத்தில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதேபோல் ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் தினசரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
Next Story






