search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூா் கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    விமானங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டபோது எடுத்த படம்.

    திருச்செந்தூா் கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.
    • இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    திருச்செந்தூா் சுப்பிர மணிய சுவாமி கோவிலில் தை உத்திர வருசாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு மூலவர், சண்முகர், பெருமாள் மற்றும் வள்ளி-தெய்வானை ஆகிய விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற மேல் தளத்திற்கு புனித நீர் எடுத்துவரப்பட்டு 9.15 மணிக்கு ஊற்றப்பட்டது.

    தொடர்ந்து 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர் திரளாக கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்குப் பின்னர் சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்மன் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது.

    நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நேர்முக உதவியாளர் செந்தமிழ் பாண்டியன், இணை ஆணையர் கார்த்திக், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது.

    Next Story
    ×