என் மலர்

  வழிபாடு

  வல்லபை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் தங்கமரத்தில் கொடி ஏற்றினர்
  X

  வல்லபை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை: பக்தர்கள் தங்கமரத்தில் கொடி ஏற்றினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 26-ந்தேதி பள்ளி வேட்டை புறப்பாடு நடைபெற உள்ளது.
  • 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.

  ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரத்தில் ஸ்ரீவல்லபை ஐயப்பன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவில் போல அமைந்துள்ள இந்த கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் தலைமை குருசாமி மோகன் தலைமையில் தொடர்ந்து நடந்து வருகிறது.

  இதன் தொடர்ச்சியாக வல்லபை ஐயப்பன் கோவில் மண்டல பூஜையையொட்டி நேற்றுகாலை கொடியேற்றம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் தலைமை குருசாமி மோகன் தலைமையில் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமம், அஷ்டாபிேஷகம், தீபாராதனை நடைபெற்றது.

  அன்று காலை 6 மணிக்கு தங்கக்கொடி மரத்தில் கோவிலின் கொடியை பக்தர்கள் சுவாமியே, சரணம் ஐயப்பா என்ற முழக்கத்துடன் ஏற்றினர்.

  இதைத்தொடர்ந்து தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பூத பலி பூஜை நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து வருகிற 26-ந்தேதி மாலை 4 மணிக்கு பள்ளி வேட்டை புறப்பாடு மற்றும் நகர் ஊர்வலம் நடைபெற உள்ளது. ஊர்வலம் நடைபெறும் நேரத்தில் கோவில் நடைபாதை அடைக்கப்படும்.

  தொடர்ந்து வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று காலை 8 மணிக்கு ஐயப்ப பக்தர்கள் பேட்டை துள்ளல் மற்றும் நீராட்டுவிழா, கொடியிறக்கம் நிகழ்ச்சி உள்ளிட்ட சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. அன்று மாலை கலந்து கொள்ளக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் அன்னதான நிகழ்ச்சி நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.

  Next Story
  ×