search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது
    X

    வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 6-ந்தேதி நடக்கிறது

    • ஜூலை 1-ந்தேதி விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பிரவேசபலி உள்ளிட்டவை நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி மாலை வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    திருச்சி உறையூரில் சக்தி தலங்களில் புகழ்பெற்ற வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு கருவறையில் அம்மன் மேற்கூரையின்றி மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும், வெட்ட வெளியில் வீற்றிருந்து மக்களை காத்து வருகிறார். இந்நிலையில் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் புதிதாக கருங்கல் அர்த்த மண்டபம், அர்த்த மண்டப கதவு மற்றும் நிலைக்கு வெள்ளித்தகடு போர்த்துதல், அலங்கார மண்டபம், தூண்களை கலைநயத்துடன் புதுப்பிக்கும் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. மேலும் அனைத்து மண்டபங்கள், ராஜகோபுரம், விமானங்களை பழுதுநீக்கி புதுப்பித்தல் உள்பட பல்வேறு திருப்பணிகளும் நடைபெற்று வந்தன.

    இந்த திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் (ஜூலை) 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி அடுத்த மாதம் 1-ந்தேதி காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், பூர்ணாஹுதி, 8.30 மணிக்கு வெக்காளியம்மனிடம் அனுமதி பெறுதல், மாலை 5.30 மணிக்கு பிரவேசபலி உள்ளிட்டவை நடைபெறுகிறது.

    மறுநாள் காலை 7 மணிக்கு அய்யாளம்மன் படித்துறையில் இருந்து திருமஞ்சன தீர்த்தம் கொண்டு வருதல், 8 மணிக்கு நவக்கிரக ஹோமம் உள்ளிட்டவற்றை தொடர்ந்து யாகசாலை நிர்மானம் நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, மாலை 6.30 மணிக்கு முதற்கால யாகபூஜை நடைபெறுகிறது.

    வருகிற 3-ந்தேதி காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாகபூஜையும், மாலை 3-ம் கால யாகபூஜையும், 4-ந்தேதி காலை 7.20 மணிக்கு 4-ம் கால யாகபூஜையும், மாலை 6 மணிக்கு 5-ம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. வருகிற 5-ந்தேதி காலை 8.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜையும், மாலை 6 மணிக்கு 7-ம் கால யாகபூஜையும், 6-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு 8-ம் கால யாகபூஜையும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அன்று காலை 6 மணியளவில் யாத்ராதானம் நடைபெறுகிறது. பின்னர் காலை 6.20 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோவிலை வலம் வந்து விமானம், மூலாலயம் சேருதல் நடக்கிறது.

    6-ந்தேதி காலை 6.45 மணிக்கு ராஜகோபுரம், விநாயகர் முதலான மூர்த்தி விமானங்கள் கும்பாபிஷேகமும், காலை 6.50 மணிக்கு வெக்காளியம்மன், மூலவ மூர்த்திகளின் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு மகா அபிஷேகமும், கலசபூஜைகளும், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனையும் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 7 மணிக்கு வெக்காளியம்மன் திருவீதி உலா வந்து பக்கதர்களுக்கு அருள்பாலிக்கிறார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர்கள் ஞானசேகரன், லட்சுமணன் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×