என் மலர்tooltip icon

    வழிபாடு

    தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து இலை விபூதி
    X

    தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து இலை விபூதி

    • முருகப்பெருமானின் 12 கைகளில் உள்ள நரம்புகளைப் போன்று பன்னிரு நரம்புகள் இலையில் உள்ளதால் இதனை ‘பன்னிரு இலை’ என்பர்.
    • கோவில் திருப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலியாக இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்செந்தூர் கோவிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி தீராத நோய்களை தீர்க்கும் அருமருந்து. முருகப்பெருமானின் 12 கைகளில் உள்ள நரம்புகளைப் போன்று பன்னிரு நரம்புகள் இலையில் உள்ளதால் இதனை 'பன்னிரு இலை' என்பர். அதுவே நாளடைவில் மருவி 'பன்னீர் இலை' என்றானது.

    கோவில் திருப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு கூலியாக இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்டவர்கள் தூண்டிகை விநாயகர் கோவிலைக் கடந்து சென்று, இலை விபூதி பிரசாதத்தை திறந்து பார்த்தால், அவர்களுக்குரிய கூலி தங்க காசாக மாறியிருந்தது.

    Next Story
    ×