என் மலர்
வழிபாடு
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலில் சம்பக சஷ்டி விழா
- அஷ்ட பைரவர் யாகம் நடந்தது.
- 6 நாட்களும் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.
திருப்பத்தூரில் குன்றக்குடி ஐந்து கோவில் தேவஸ்தானத்திற்குட்பட்டது திருத்தளிநாதர் கோவில். இக்கோவிலில் உள்ள யோகபைரவருக்கு ஆண்டுதோறும் சம்பக சஷ்டி விழா தொடர்ந்து 6 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இதையொட்டி இந்தாண்டு இந்த விழா நேற்று முன்தினம் காலை யோக பைரவர் சன்னதி முன்பு யாகசாலையில் பூர்வாங்க பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து பாஸ்கர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் அஷ்ட பைரவர் யாகம் நடத்தினர். தொடர்ந்து பூர்ணாகுதி, தீபாரதனைகள் நடைபெற்று யாக கலசங்கள் மூலவர் சன்னதிக்கு புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சுவாமிக்கு மஞ்சள்காப்பு அலங்காரம், மஞ்சள் வஸ்திரம் சாத்துதல் நிகழ்ச்சியும், மாலையில் அஷ்ட பைரவர் யாகமும் நடந்தது. இதேபோல் 6 நாட்களும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சம்பக சஷ்டியினர் செய்து வருகின்றனர்.