search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    X

    தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

    • விழா தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • 20-ந்தேதி தேர்பவனி நடைபெறுகிறது.

    தளவாய்புரத்தில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்கு குடும்ப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் மற்றும் நற்செய்தி பெருவிழா நடக்கிறது. இதில் ராமபுரம் பங்குத்தந்தை ஏ.அன்பரசன் கலந்து கொண்டு நற்செய்தி வழங்குகிறார்.

    நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் 6.30 மணிக்கு கொடியேற்றமும், திருப்பலியும் நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அருட்பணியாளர் அலோசியஸ் எம்.பென்சிகர் தலைமை தாங்குகிறார். புதூர் பங்குத்தந்தை சாம் மேத்யூ மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு அன்பியங்களின் சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.

    விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும், பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    14-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் வி.ஹிலாரியஸ் தலைமை தாங்குகிறார். அதைத்தொடர்ந்து மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழாவும் நடக்கிறது.

    20-ந்தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் முதல் திருவிருந்து திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி, மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை மற்றும் நற்கருணை ஆசீர் நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் இல்ல அருட்பணியாளர் பி.யூஜின் தலைமை தாங்க, கோட்டார் வட்டார முதன்மை பணியாளர் ஏ.ஆன்டணி சகாய ஆனந்த் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது.

    21-ந்தேதி காலை 7 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. இதற்கு ஆயர் இல்ல அருட்பணியாளர் எஸ்.அருளப்பன் தலைமை தாங்க, அருட்பணியாளர் எம்.ஜார்ஜ் கிளாமன்ட் மறையுரையாற்றுகிறார். பிற்பகல் 3 மணிக்கு தேர்பவனி நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு நற்கருைண ஆசீர், கொடியிறக்கமும், 8 மணிக்கு பொதுக்கூட்டமும், பரிசு வழங்குதலும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், பங்கு நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×