என் மலர்

    வழிபாடு

    100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்: சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த கோரிக்கை
    X

    100 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்: சீனிவாச பெருமாள் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடத்த கோரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 27-ந்தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • அக்டோபர் 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    ஆரணி டவுன் கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலர்மேலு மங்கை சமேத கில்லா சீனிவாச பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா மற்றும் ரத சப்தமி சமயத்தில் சாமி திருவீதி உலா நடைபெறும். இந்த கோவிலில் உலா வந்த மரத்தேர் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீ விபத்தில் சேதம் அடைந்தது.

    பக்தர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.28 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசின் சார்பில் ரூ.18 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு மக்கள் பங்களிப்புடன் ரூ.34 லட்சம் மதிப்பில் தேர் செய்ய முடிவு செய்து பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

    புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற வேண்டும். அதன் பின்னர் தான் பிரம்மோற்சவ திருத்தேர் திருவீதி உலா நடைபெறும். வருகிற 27-ந் தேதி புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது 7-ம் நாள் அக்டோபர் 3-ந் தேதி தேரோட்டம் நடைபெற வேண்டும்.

    வெள்ளோட்டம் நடந்தால்தான் தேரோட்டம் நடத்த முடியும். பிரம்மோற்சவ விழா தொடங்க குறைந்த நாட்களே உள்ள நிலையில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டாவது நடத்த வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே வெள்ளோட்டம் நடத்த அதிகாரிகள் விரைந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    Next Story
    ×