என் மலர்
வழிபாடு

திருப்பதியில் வசந்த உற்சவம் தொடங்கியது
- வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது.
- நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வசந்த உற்சவம் இன்றுமுதல் 3 நாட்கள் நடக்கிறது. கோவிலின் பின்புறம் அமைந்துள்ள வசந்தமண்டபத்தில் வசந்த உற்சவங்கள் இன்று காலை தொடங்கியது. காலை 6.30 மணிக்கு ஏழுமலையான் மாடவீதியில் வீதி உலா நடந்தது.
வசந்த உற்சவத்தில் 2-வது நாளாக நாளை தங்க தேரோட்டம் நடக்கிறது. ஸ்ரீதேவி, பூதேவி சமதராக ஏழுமலையான் தங்கத்தேரில் எழுந்தருளுகிறார். இதற்கிடையில், வசந்தோற்சவ விழாவையொட்டி 3 நாட்களுக்கு பல்வேறு சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
திருப்பதி கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. நேற்று 62,076 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 23 ஆயிரத்து 699 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.3.21 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story






