என் மலர்
வழிபாடு

ரதசப்தமி: சூரியனார் கோவிலில் திருக்கல்யாணம்
- கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலில் சிவசூரியபெருமான் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ரதசப்தமி பெருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்றுமுன்தினம் மாலை 6 மணிக்கு நடந்தது.
அன்றைய தினம் திருமங்கலகுடியிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து கோவில் வாசலில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் ஊஞ்சல் உற்சவமும், சிறப்பு ஹோமமும் நடைபெற்றது. விழாவில் மாங்கல்ய தாரணம், தீபாராதனையை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் திருக்கல்யாண உபயதாரர் திருமங்கலகுடி காளிமுத்து ராஜமுநேந்திரர் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.






