search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாளை ராகு கேது பெயர்ச்சி: 4 ராசிக்காரர்களுக்கு பரிகாரம்
    X

    நாளை ராகு கேது பெயர்ச்சி: 4 ராசிக்காரர்களுக்கு பரிகாரம்

    • சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது.
    • திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள்.

    ராகு மற்றும் கேது பெயர்ச்சி 2023-ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி நாளை (8-ந் தேதி) நிகழ உள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி அக்டோபர் 30-ந் தேதி நடக்க உள்ளது என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இந்த பெயர்ச்சியின் போது ராகு மீன ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகின்றனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2025ம் ஆண்டு மே 18-ந் தேதி இரவு 7.35 மணி வரை இந்த கிரகங்கள் மேலே குறிப்பிட்டுள்ள ராசியில் சஞ்சரிக்கும். மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் ராகுவும், கேதுவும் எப்போதும் பின்னோக்கி அதாவது வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவை. இவை சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சர்ப்ப கிரகங்களின் இடையில் மற்ற கிரகங்கள் அமைந்துவிட்டால் அதனை கால சர்ப்ப தோஷம் அல்லது யோகம் என்பார்கள். நாளை பிற்பகல் 3 மணி 36 நிமிடத்துக்கு ராகு, தான் இருந்த மேஷ ராசியில் இருந்து, மீன ராசிக்கு வருகின்றார்.

    கேது, தான் இருந்த துலாம் ராசியில் இருந்து கால புருஷனுக்கு ஆறாம் ராசியான கன்னிராசிக்கு வருகிறார். ராகுவுக்கு இடம் தந்து குரு வலிமையுடன் இருப்பதால் ராகுவின் பாதிப்பு குறையும்.

    அதுபோல் ராகுவின் எதிர் ராசியான கன்னி ராசியும் புதனின் சுபத்தன்மையை பொறுத்து கெடுபலன்களை குறைத்து கொள்ளும். இந்த ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை சிறப்பு வழிபாடுகளும் சர்ப்ப சாந்தி பரிகாரங்களும் செய்து கொள்வது நல்லது. குறிப்பாக சிம்மம், கன்னி, கும்பம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்கள் பரிகார வழிபாடுகள் செய்வது நல்லது. மற்ற ராசிக்காரர்கள் சாதாரண பூஜைகள் செய்யலாம்.

    ராகு-கேது பெயர்ச்சி பாதிப்புகளில் இருந்து தற்காத்துக் கொள்ள அம்மன் கோவில்களில் உள்ள நாகப் பிரதிஷ்டைகளை வணங்கி வாருங்கள். அதுவே பரிகாரத்துக்கு போதுமானது. வேறு எந்த சிறப்பு பரிகார பூஜைகளும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலும் இந்த முறை ராகு-கேது தோஷம் பெரும் பாதிப்பு செய்வதில்லை. மாறாக தன்னம்பிக்கை துணிச்சலை வளர்க்கும். எனவே கவலை தேவையில்லை.

    சிம்மம்

    இதுவரை ராகு ராசிக்கு 9ம் இடத்திலும், கேது 3ம் இடத்திலும் சஞ்சரித்து வந்தனர். தற்போது இந்த பெயர்ச்சி மூலம் ராகு 8-ம் இடத்திலும், கேது 2-ம் இடத்திலும் அமர்கின்றனர். இதன் காரணமாக பொதுவாக உங்களுக்கு கடன் தொல்லை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் பிரச்சினை ஏற்படலாம். அஷ்டம ஸ்தானத்தில் ராகு அமர்வதோடு, ராசிக்கு 2ல் தன ஸ்தானத்தில் கேது இருப்பதால் உங்களின் வருவாய் குறையும். அதனால் வருமானம் குறைவதற்கும் வாய்ப்பு உண்டு. தேவையற்ற சிந்தனைகள், மன குழப்பங்கள் வரும். ஆனால் பனி போல அவை மறைந்து விடும். எனவே எந்த விஷயத்தையும், செலவையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குறிப்பாக உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.

    கன்னி

    இந்த ராகு கேது பெயர்ச்சியினால் கன்னி ராசியிலேயே கேது பகவான் அமர்கிறார். 7-ம் இடத்தில் ராகு அமர உள்ளார்.

    லக்கினத்தில் கேதுவும், 7-ல் ராகு அமர்வதால் திருமண வாழ்க்கையில் சிறு, சிறு சலசலப்பு வரலாம். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட பூஜை செய்யுங்கள். மேலும் கன்னி ராசியினரின் வளர்ச்சி தடைப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் முன்னேற்றத்தை தடுக்க சிலர் கங்கனம் கட்டிக் கொண்டு வருவார்கள். கவனமாக இருங்கள். நீங்கள் எடுக்கும் முடிவு, செயல்களில் உங்களின் சிந்தனை நிலையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

    கும்பம்

    கும்ப ராசிக்காரர்களுக்கு 2ம் இடத்தில் ராகுவும், 8ல் கேதுவும் இந்த பெயர்ச்சியின் போது அமையப் பெறுவார்கள்.

    இரண்டாம் இடத்தில் ராகு, 8ல் கேது அமர்வதால் உங்களின் குடும்ப வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வரும். மேலும் தற்போது ஜென்ம சனி நடந்து கொண்டிருப்பதால் கூடுதல் கவனத்துடன் இருக்கவும். மேலும் குடும்ப விருத்தி அடைவதில் கவனம் தேவை.

    மீனம்

    மீன ராசியிலேயே ராகு வருவதும், கேது 7ம் இடத்தில் அமர்வதாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலமாக இருக்கும். திருமண முயற்சியில் இருப்பவர்களுக்கு கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. புத்திர தோஷம், சொத்து தகராறு போன்ற விஷயங்கள் வர வாய்ப்புள்ளதால் சற்று பொறுமையை கையாழுங்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து நடப்பது அவசியம்.

    ராகு-கேது பெயர்ச்சி நல்ல இடங்களில் ஏற்பட்டாலும் சரி, கெட்ட இடங்களில் மாறினாலும் சரி. அதற்கு பயப்பட தேவையில்லை. குண்டலினி சக்தியை தன்னுள்கொண்டு ஜீவ ஜோதியான சித்தர்களின் ஜீவ சமாதிகளில் சென்று வழிபட்டால் போதும். ராகு-கேது பெயர்ச்சி பலனை உங்களுக்கு இனிய பெயர்ச்சியாக மாற்றுங்கள்.

    Next Story
    ×