search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
    X

    ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

    • இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    • 15-ம்தேதி அன்னையின் தேர் பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தில் பிரசித்தி பெற்ற பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயம் அமைந்துள்ளது. சின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் 150-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவையொட்டி காலையில் கொடியேற்றத்திற்கு முன்னதாக 3 திருப்பலிகள் நடத்தப்பட்டது.

    தொடர்ந்து சாத்தான்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பங்குதந்தை ஜான் பிரிட்டோ கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். பின்னர் மறையுறை, நற்கருணை ஆசீர் நடந்தது.

    விழாவில் அருட் தந்தையர்கள் செல்வராயர், வில்பர்ட், பீட்டர் பாஸ்டியான், அமலதாஸ், ஆரோக்கியராஜ், ராஜேஷ், சகாயராஜ், போஸ்கோ உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் 9-ம் நாளான வருகிற 14-ந் தேதி திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சி, காலை 9 மணிக்கு அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் அன்றைய தினம் மாலையில் பாளையங்கோட்டை முன்னாள் மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.

    10-ம் நாள் அன்று காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும், தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்படுகிறது. மாலையில் அன்னையின் தேர் பவனி, நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ, உதவி பங்குத்தந்தை எழில் நிலவன் மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×