search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய விண்ணேற்பு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • 16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா ஆலய 337-ம் ஆண்டு விண்ணேற்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்டம் முன்னாள் பிஷப் ஜீடு பால்ராஜ் தலைமையில் ஆலயத்தில் திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான இறைமக்கள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. பின்னர் நடந்த திருப்பலியில் ஆலய பங்குத்தந்தை அந்தோணி குருஸ், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு ரீகன், பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பங்கு தந்தை சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

    விண்ணேற்பு திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. இன்று காலை 8.30 மணிக்கு புதுநன்மை விழாவும், 13-ந் தேதி காலை 9 மணிக்கு மரியன்னை மாநாடும், 14-ந் தேதி மாலை 6.30 மணிக்கு ஆராதனை மற்றும் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடைபெறுகிறது.

    15-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு பாளை.மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நடத்தி தொடங்கி வைக்கிறார். இதனை தொடர்ந்து ரத ஊர்வலமும், இறை மக்கள் கும்பிடு சேவை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    16-ந் தேதி இரவு 7 மணிக்கு விண்ணேற்பு திருவிழா நிறைவடைகிறது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விண்ணேற்பு பெருவிழா ரத ஊர்வலம் நடை பெறாமல், ஆலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு விண்ணேற்பு பெருவிழா நடை பெறுவதால், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து இறை மக்கள் கலந்துகொள்வதால் பஸ் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு, சுகாதார வசதிகள், குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×