search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது
    X

    பாய்மரங்கள் ஏற்றப்பட்டதையும், அதில் கலந்து கொண்ட இஸ்ஸாமியர்களையும் படத்தில் காணலாம்.

    நாகூர் தர்கா கந்தூரி விழாவையொட்டி 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது

    • 24-ந்தேதி கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜனவரி 2-ம்தேதி சந்தன கூடு ஊர்வலம் நடக்கிறது.
    • 3-ம் தேதி சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது.

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ் பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடை பெறுவது வழக்கம்.

    அதன்படி வருகிற 24-ந்தேதி 466-ம் ஆண்டு கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை ஆண்டவர் தர்காவில் பரம்பரை கலிபா தலைமையில் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின்னர் மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டது.

    அப்போது, கூடியிருந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கந்தூரி விழாவை சிறப்பிக்கும் விதமாக அனைவருக்கும் கற்கண்டு மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான 24ம் தேதி கொடியேற்று வைபவமும், அதனைத் தொடர்ந்து ஜனவரி 2-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலமும் 3-ம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது.

    Next Story
    ×