என் மலர்

  வழிபாடு

  ஆடிக்கொடை விழா தொடக்கம்: முத்தாரம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி
  X

  ஆடிக்கொடை விழா தொடக்கம்: முத்தாரம்மன் கோவிலில் முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 1-ந்தேதி அம்மனுக்கு குடியழைப்பு பூஜை, மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.
  • 2-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.

  கோவை சங்கனூர்- நல்லாம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து 11.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முகூர்த்த கால் அலங் கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு நடப்பட்டது.

  இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வருகிற 31-ந் தேதி 501 திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி, 1-ந் தேதி அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை, 2-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

  அன்று மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரியுடன் அம்மனை அழைத்து வருதல், இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது. 3-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

  Next Story
  ×