search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அமாவாசை அன்று 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை
    X

    அமாவாசை அன்று 2 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை

    • மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயர் உண்டு.
    • அங்காளம்மனை உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியும்.

    1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூர் கோவிலில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

    2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    3. மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

    4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

    5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

    6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

    7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

    9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

    10.மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

    11.அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

    13.மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்க பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

    14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

    15. தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயணியின் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

    16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு,கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

    17.சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்ேபட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    19. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    20. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

    21.திருப்பூர் அருகே முத்தம்பாளை யம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

    22. அங்காளம்மன் ஆலயங்களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

    23. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் வந்து அங்காளம்மனை தரிசித்து செல்கிறார்கள்.

    24.சமீப காலமாக மேல்மலையனூருக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    25. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல்மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    26. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

    27. காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    28. மேல்மலையனூர் கோவில் புற்று மண் சித்தர்கள், தேவர்கள், மகான்கள் பாதம் பட்டு மேலும் புனிதமான மண்ணாகும்.

    29.மேல்மலையனூர் பிள்ளையாருக்கு ஒரு கால் ஊனமாக இருந்ததாம். பித்து பிடித்த நிலையில் இருக்கும் தனது தகப்பனாரின் காவல் தெய்வமாக இருந்து அன்னையை வேண்டிய பின்பு நல்லகால்களை பெற்றதாக கூறுவதுண்டு.

    Next Story
    ×