என் மலர்

  வழிபாடு

  தூத்துக்குடியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா: கிடாக்கறி விருந்து பரிமாறப்பட்டது
  X
  திருவிழாவில் கலந்து கொண்ட ஆண்கள் கிடாக்கறி விருந்து சாப்பிட்ட காட்சி.

  தூத்துக்குடியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கோவில் திருவிழா: கிடாக்கறி விருந்து பரிமாறப்பட்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • எவ்வளவு வேண்டுமானாலும் கறி விருந்து சாப்பிடலாம்.
  • மதுபோதையில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.

  தூத்துக்குடி தருவைகுளம் கிழக்குக் கடற்கரைச் சாலை செல்லும் பகுதியில் சக்கம்மாள்புரம் அடுத்து உள்ள துரைச்சாமிபுரத்தில் நூற்றாண்டுகள் பழமையான மணிகட்டி மாடசாமி கோவில் உள்ளது.

  இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் கொடை விழா பிரசித்தி பெற்றதாகும். சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடி வழிபட்டு செல்வார்கள்.

  கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் நூற்றுக்கணக்கான கிடாக்களை மணிகட்டி மாடசாமிக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு விருந்தாக வழங்கப்படும்.

  இந்த விருந்து நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சாப்பிடுவார்கள். யாரும் எடுத்துச் செல்லக் கூடாது. மதுபோதையில் வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் உள்ளதாகவும், எவ்வளவு வேண்டுமானாலும் கறி விருந்து சாப்பிடலாம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

  இந்த ஆண்டு கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று இரவு மணிகட்டி மாடசாமிக்கு சாம பூஜைக்கு பின் இன்று காலை ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட கறி விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது .

  இதில் கறி விருந்து சாப்பிட மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக வந்து கலந்து கொண்டு மணிகட்டி மாடசாமி வணங்கி சென்றனர். இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×