search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல், இருமத்தூர் காவிரி ஆற்றின் கரையோரம் குவிந்த மக்கள்
    X

    இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்களை படத்தில் காணலாம்.

    மகாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கல், இருமத்தூர் காவிரி ஆற்றின் கரையோரம் குவிந்த மக்கள்

    DPI01250922: மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்று மகாளய அமாவாசையையொட்

    மகாளய அமாவாசை தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுவதோடு பித்ரு தோஷம் நீங்க தர்ப்பணம் கொடுக்க வேண்டும். இதன் முன்னோர்களின் ஆசி கிடைப்பதோடு சுபகாரியத்தடைகளும் நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இன்று மகாளய அமாவாசையையொட்டி தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல்லில் மக்கள் குவிந்தனர். அங்கு காவிரி ஆற்றின் கரையோரம் அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

    இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருமத்தூர் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் மக்கள் வழிப்பட்டனர்.

    இதனால் இந்த இரு இடங்களில் இன்று மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். பொதுமக்களுக்கு கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×