search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருந்து அருள் புரியும் மூன்று தெய்வ அம்சங்கள்
    X

    குடும்பத்துக்கு பாதுகாப்பாக இருந்து அருள் புரியும் மூன்று தெய்வ அம்சங்கள்

    • குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம்.
    • குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    ஆன்மிக ரீதியாக ஒரு குடும்பத்துக்கு மூன்று தெய்வ அம்சங்கள் பாதுகாப்பாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம். அதாவது, ஊருக்குள் இருக்கும் மூல தெய்வம். அடுத்தது, குலதெய்வம். பிறகு காவல் தெய்வம் ஆகியவையாகும். அந்த அடிப்படையில் குலதெய்வ வழிபாடு ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவசியம். வருடம் ஒருமுறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தை வழிபட்டால் குலம் தழைத்து, சந்ததியினருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைக்கும்.

    படிப்பு, தொழில் என்று பல்வேறு காரணங்களினால் பிறந்த மண்ணைவிட்டு, வெவ்வேறு இடங்களுக்குச் சென்று வாழவேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. எப்போதேனும் ஒருமுறை பிறந்த ஊருக்குச் சென்றாலும்கூட, குலதெய்வக் கோவிலுக்குச் சென்று வழிபடமுடியாத நிலை காணப்படுகிறது. முன்பெல்லாம் குடும்பப் பெரியவர்கள் நம்முடைய குலதெய்வம் பற்றியும், குலதெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் எடுத்துச் சொல்வார்கள். ஆனால், இன்று சிலருக்கு குலதெய்வம் எது என்றே தெரிந்துகொள்ளமுடியாத நிலையில், குடும்பப் பெரியவர்களிடம் குலதெய்வம் பற்றி தெரிந்துகொண்டு வழிபடலாம்.

    குல தெய்வம் பற்றி எதுவுமே அறிய இயலாத நிலையில் இருப்பவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றியில் திருநீறு அல்லது திருமண் இட்டுக்கொண்டு, வீட்டின் தலைவாசல் நிலையைக் கழுவி மஞ்சள் பூசி, குங்குமம், சந்தனம் இட்டு புதுத்துணி சாற்றி, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்து, பொங்கல் இட்டு நிலைப்படிக்கு பூஜை செய்து வேண்டிக் கொண்டால், குடும்பத்தின் குல தெய்வம் பற்றிய தகவல் விரைவில் தெரியவரும் என்ற தகவலை ஆன்மிக சான்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×