என் மலர்
வழிபாடு

'அரோஹரா' என்பதன் பொருள் என்ன?
- ஹரன்-அரன்-சிவபெருமான்
- எங்கு பார்த்தாலும் ‘அரன் நாமமே சூழ்க' என்றார்.
கோவில்களில் தீபாராதனையின் போது 'அரோஹரா' என்ற கோஷம் எழுப்புகிறார்கள். குறிப்பாக சிவபெருமானை வழிபடும் போது, இந்த கோஷம் அதிகமாக எழுப்பப்படுகிறது.
ஹரன்-அரன்-சிவபெருமான். இதைப்பற்றி காஞ்சி ஸ்ரீ மகாசுவாமிகள் சொல்லியிருப்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். "ஞானக் குழந்தையான ஞானசம்பந்தர் 'வாழ்க அந்தணர்' என ஆரம்பித்து, ஒரு பதிகமே பாடியிருக்கிறார். அந்தப்பாடலில் அவர், 'ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமுந் துயர் தீர்கவே' எனப் பாடியிருக்கிறார்.
எங்கு பார்த்தாலும் 'அரன் நாமமே சூழ்க' என்றார். ஹரஹர என்று எங்கு பார்த்தாலும் ஜனங்கள் கோஷிக்க வேண்டும் என்று அந்தத் தெய்வக் குழந்தை போட்ட ஆக்ஞா(உத்தரவு) விசேஷத்தால் தான், இன்றளவும், 'நம: பார்வதீ பதயே' என்று ஒருவர் சொன்னால், நாம் அத்தனை பேரும், 'ஹரஹர மஹாதேவா' என்கிறோம்.
'அரோஹரா! அண்ணாமலைக்கு அரோஹரா!' என்றெல்லாம் அத்தனை பேரும் சேர்ந்து சொல்கிறோம். முருகனுக்குக் காவடி எடுத்து கோஷம் போட்டாலும் இந்த அரோஹரா தான். 'தண்டாயுதபாணிக்கு அரோஹரா' என்கிறோம்" என்பது காஞ்சி ஸ்ரீமகா சுவாமிகள் வாக்கு.