search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி
    X

    பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ஆலய தேர்பவனி

    • 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
    • அன்னையின் பிறப்பு பெருவிழாவாக இன்று நடைபெறும்.

    சென்னை பெசன்ட்நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலையத்தின் பொன் விழா மற்றும் ஆண்டு பெருவிழா, கடந்த மாதம் 29-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் உழைப்பாளர் தின விழா, நலம் பெறும் விழா, இளையோர் விழா, பக்தசபை விழா, நற்கருணை பெருவிழா, இறையழைத்தல் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப விழா என்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு கூட்டுத் திருப்பலி மற்றும் ஆராதனையும், நவநாள் ஜெபமும் நடத்தப்பட்டது. இதில் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்றனர்.

    தேர்பவனி

    இதன் தொடர்ச்சியாக ஆடம்பர தேர் பவனி நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலை முதல் பிற்பகல் வரை திருப்பலிகள் நடந்தன. அதன் பின்னர், மாலை 5.30 மணிக்கு மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஆடம்பர திருப்பலியை நடத்தி அதன் பின்னர் தேர்பவனியையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பக்தர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு, பெசன்ட்நகர் கடற்கரை சாலை, 4-வது பிரதான சாலை மற்றும் 2 மற்றும் 7-வது அவென்யூ வழியாக சென்று மீண்டும் ஆலயத்துக்கு வந்தடைந்தது.

    கொடி இறக்க நிகழ்வு

    இதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அன்னையின் பிறப்பு பெருவிழாவாக, நடைபெற உள்ளது. இதையொட்டி, மாலை 5.30 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் அன்னைக்கு முடிசூட்டு விழாவும், அதோடு கொடி இறக்க நிகழ்வும் நடத்தப்பட இருக்கிறது.

    Next Story
    ×