என் மலர்
வழிபாடு

பால்குடம் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
மயிலாடுதுறை அருகே பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட திருவிழா
- பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் காமராஜர் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குடம் மற்றும் காவடி திருவிழா நடந்தது. முன்னதாக மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரை துலா கட்டத்தில் புனித நீராடிய பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க காப்பு கட்டி பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்தனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்த பால்குடத்திற்கு வீடு, வீடாக பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
பின்னர் பால்குட ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. அங்கு பத்ரகாளியம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பால்குடத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பத்ரகாளியம்மனுக்கு கரக உற்சவம் நடந்தது.






