என் மலர்tooltip icon

    வழிபாடு

    சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X
    சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    சுசீந்திரம் கோவிலில் தெப்பத் திருவிழா நாட்களில் தினமும் சாமி ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி பஜனை, சிறப்பு நாதஸ்வரம், பக்தி பாடல்கள், ஆன்மிக சொல்லரங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்பத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பட்டப்பள்ளி மடம் சாலியர் டாக்டர் சிவபிரசாத் தலைமையில் கொடி ஊர்வலமாக சன்னதி தெருவை சுற்றி கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி. மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு சமய சொற் பொழிவு, பக்தி பஜனையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சாமி ஊர்வலம், சமய சொற்பொழிவு, பக்தி பஜனை, சிறப்பு நாதஸ்வரம், பக்தி பாடல்கள், ஆன்மிக  சொல்லரங்கம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் தேர், பிள்ளையார் தேர், சப்பர தேர் ஆகிய மூன்று தேர்கள் உலா வருகின்றன.

    தேரோட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு சாமி மண்டபகப்படிக்கு தந்த பல்லக்கில் எழுந்தருளல், இரவு 9 மணிக்கு ரிஷப வாகனத்தில் சாமி திருவீதி உலா வருதல், 10 மணிக்கு சப்தாவர்ண காட்சி ஆகியவை நடக்கிறது.

    10-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் தெப்பத்திற்கு சாமியும் அம்பாளும், பெருமாளும் எழுந்தருளும் தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஆராட்டு வைபவம் ஆகிய வை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கண்காணிப்பாளர் சிவக்குமார், மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் பக்த சங்க நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து செய்து வருகின்றனர்.
    Next Story
    ×