என் மலர்
வழிபாடு

சதுரகிரிக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும் பக்தர்களுக்கு வழங்கிய அனுமதியை வனத்துறை ரத்து செய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சித்ரா பவுர்ணமியையொட்டி 4 நாட்கள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்து வருவதாலும், ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளதாலும் பக்தர்களுக்கு வழங்கிய அனுமதியை வனத்துறை ரத்து செய்தது.
நேற்று முன்தினம் காலையில் கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்தது. ஆனால் மாலையில் வனத்துறை சார்பில் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தடை விதித்தது. இதனால் குழப்பமடைந்த பக்தர்கள் நேற்று காலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்தனர்.
அவர்களை தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு போலீசார் மற்றும் வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை திரும்ப செல்லுமாறு கூறினர். இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் வனத்துறை கேட்டின் முன்பு விளக்கு ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

Next Story