search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பிரான்மலை கோவிலில் திருக்கல்யாணம்
    X
    பிரான்மலை கோவிலில் திருக்கல்யாணம்

    பிரான்மலை கோவிலில் திருக்கல்யாணம்

    சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அம்பாள் தேனம்மைக்கு மங்கைபாகர் திருமாங்கல்யம் சூட்டும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், பக்தர்களுக்கு மொய் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
    சிங்கம்புணரி அருகே கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆண்ட பகுதியான திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றகுடி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் 3 அடுக்கு நிலையில் உள்ளது. ஆகாயம், மத்திபம், பாதாளம் என்று மூன்று நிலைகளில் சிவபெருமான் காட்சி அளிக்கிறார். பாதாளத்தில் திருக் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அம்மன், மத்தியில் வடுகபைரவர், ஆகாயத்தில் மங்கைபாகர் தேனம்மை ஆகியோர் காட்சி தருகின்றனர்.

    பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோவில் சித்திரை திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது.  பிரான்மலை உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கொடியேற்ற வைபவம் நிகழ்ச்சியை நடத்தினர். திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் இரவு நேரத்தில் பூதம், யானை, ரிஷபம், நந்தீசர், கிளி, கேடயம், வாகனங்கள் பஞ்சமூர்த்தி சுவாமி ஆகிய வாகனங்களில் சாமி நான்கு ரத வீதிகளில் உலாவரும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    அதில் முக்கியநிகழ்வாக நேற்று 5-ம் நாள் திருக்கல்யாண வைபவம் விழா நடைபெற்றது. முன்னதாக சாமி கோவிலை வலம் வந்து கோவில் உள்புறம் உள்ள 12 கால் கல் மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க  அம்பாள் தேனம்மைக்கு மங்கைபாகர் திருமாங்கல்யம் சூட்டும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், பக்தர்களுக்கு மொய் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
    திருக்கல்யாணத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் விருந்து சாப்பிட்டு சாமிக்கு பக்தர்கள் மொய் எழுதினர். தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  அம்மை யப்பர் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டனர். விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×