search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா தொடக்கம்
    X
    பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா தொடக்கம்

    பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா தொடக்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பட்டமங்கலம் தட்சணாமூர்த்தி கோவிலில் குரு பகவானுக்கு நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
    சிவகங்கை மாவட்டத்தில் புகழ்பெற்ற குருபகவான் வழிபாட்டுத் திருத்தலம் திருப்பத்தூர் அருகே பட்டமங் கலத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் அஷ்டமாசித்தி தட்சணாமூர்த்தி திருக்கோவிலில் உள்ளது.இந்த கோவிலின் சிறப்பு குருபகவான் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.

    ஆக்கல், காத்தல், அழித்தல், ஆகிய தெய்வமான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஒரே இடத்தில் கூடி கார்த்திகைப் பெண்களுக்கு பாவ விமோசனம் கொடுத்ததால்  இங்கு குரு பகவானுக்கு நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதன் மூலம் பல நற்பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

    நவக்கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வருகிற 14-ந்தேதி அதிகாலை 4.16 மணிக்கு கும்பராசியில் இருந்து மீனராசிக்கு இடம் பெயர்கிறார். குரு பெயர்ச்சியை முன் னிட்டு நேற்று காலை 9.30 மணியில் இருந்து கணபதி ஹோமம், குரு ஹோமத்துடன் குருபெயர்ச்சியாகம் தொடங்கியது.

    தொடர்ந்து பிற்பகல் 12.30 மணிக்கு பூர்ணாகுதி நடைபெற்று தீபாராதனை காட்டப்படும். யாகம் நிறைவடைந்து கலச புறப்பாடு நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை வீரப்ப செட்டியார் செய்து வருகிறார்.
    Next Story
    ×