என் மலர்
வழிபாடு

ஆண்டவன் உத்தரவு பெட்டியில் போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை
ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. முருகப்பெருமானே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குண்டுசாலை குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த பொன் கபில்தேவ் (வயது 42) என்ற பக்தரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை செய்யுமாறு கூறியதாக அவர் கோவிலில் வந்து கூறினார். அதன்படி சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் நேற்று முதல் போகர் சித்தர் உருவப்படம் வைத்து பூஜை செய்யப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த மார்ச் - 21-ந் தேதி முதல் இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோளி ஆகிய பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது.

Next Story