என் மலர்
வழிபாடு

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு நிகழ்ச்சி
குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் ஆராட்டு நிகழ்ச்சி
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் சாமிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டும், தீபாராதனையும் நடந்தது.
தக்கலை அருகே உள்ள குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா நடந்தது. அதைத்தொடர்ந்து நேற்று மாலை சாமிக்கு கோவில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
சாமிக்கு களபம், குங்குமம், பன்னீர், தேன், நெய், பஞ்சாமிர்தங்களை கொண்டு அபிஷேகம் செய்தபின் குளத்தில் ஆராட்டும், தீபாராதனையும் நடந்தது.
இதில் கோவில் மேலாளர் சுதர்சன குமார், திருவிழாக்குழு புரவலர் பிரசாத், தலைவர் சுனில்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செந்தில்குமார், முன்னாள் விழாக்குழு தலைவர் குமரி ப.ரமேஷ் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Next Story