
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.