என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் குண்டம் இறங்கியதை படத்தில் காணலாம்.
கோட்டூர் உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபாடு
By
மாலை மலர்5 March 2022 4:49 AM GMT (Updated: 5 March 2022 4:49 AM GMT)

உச்சி மாகாளியம்மன் கோவில் குண்ட்ம் திருவிழாவில் குண்டத்தில் கோவில் பூசாரி முதலில் பூப்பந்தை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் மலையாண்டி பட்டிணத்தில் உச்சிமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 15-ந் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது.
இதை தொடர்ந்து 23-ந் தேதி கொடியேற்று விழா நடந்தது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது. கடந்த 1-ந் தேதி சக்தி கும்பஸ்தானம், 2-ந் தேதி காலை முதல் மாலை வரை கோவிலுக்கு பக்தர்கள் மாவிளக்கு, பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நேற்று முன்தினம் பகல் 11 மணி அம்மன் திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு குண்டம் பூ வளர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று காலை பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 57 அடி நீள குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது. குண்டத்தில் கோவில் பூசாரி முதலில் பூப்பந்தை உருட்டி விட்டார். அதை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.
அப்போது தாயே மாகாளி என்று பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குண்டம் விழாவையொட்டி கோட்டூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு தேர் நிலை சேர்தல், பாரி வேட்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதி பகல் 3 மணி முதல் மகா அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Next Story
×