
இதேபோல் இதர வழிகளான ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்திலும் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்றனர். பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவிலில் வெளிப்பிரகாரம், உட்பிரகாரத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நேற்று பகல் முழுவதும் கடும் வெயில் இருந்ததால் பக்தர்கள் அவதி அடைந்தனர். எனவே பக்தர்கள் நலனுக்காக கோவில் நிர்வாகம் சார்பில் வெளிப்பிரகாரத்தில் கயிற்றால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டு அதில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.