என் மலர்

  வழிபாடு

  அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு
  X
  அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

  அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை.
  ஆட்டையாம்பட்டி அருகே பெத்தாம்பட்டி கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7-ந் தேதி நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

  அய்யனாரப்பனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெண் பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லை. அவர்கள் கோவிலுக்கு வெளியே சென்று வழிபாடு நடத்தினர். ஆண்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  இதில் நெய்க்காரப்பட்டி, அல்லிக்குட்டை, பூலாவரி, பெத்தாம்பட்டி உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
  Next Story
  ×