என் மலர்

  வழிபாடு

  சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடைபெற்ற போது எடுத்த படம்.
  X
  சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகா ருத்ர யாகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

  சிதம்பரம் நடராஜருக்கு மகாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
  சிதம்பரம் நடராஜர் கோவிலில் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் மகாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

  அதன்படி மாசி மாத மகாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு விபூதி, பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீா், பன்னீா், சந்தனம், புஷ்பம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

  முன்னதாக மகாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று மதியம் 3 மணியளவில் சிவகங்கை குளம் அருகே பெரிய பந்தல் அமைத்து, மகா ருத்ர யாகம் நடந்தது. இதில் 1016 கலசங்களுடன், சிறப்பு மகா ருத்ர யாகத்தை 200-க்கும் மேற்பட்ட தீட்சிதா்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கோடி அர்ச்சனை நடந்தது. இதனை தொடர்ந்து 1016 கலசங்களில் இருந்த புனித நீரால் நடராஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகாபிஷேகம் நடந்தது.

  இதற்கான ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதா்கள் செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  இதுகுறித்து தீட்சிதர்கள் தரப்பில் கூறுகையில், நடராஜர் கோவிலில் மாசி மாதம் மகா அபிஷேகத்தை முன்னிட்டு கோடி அர்ச்சனை பூர்த்தியும், லட்ச ஹோமமும் நடைபெற்றது. இதில் பங்கேற்க பல்வேறு மாநிலத்தில் இருந்து 4 வேதங்கள் படித்த பண்டிதர்கள் 150 பேர் வந்திருந்தனர். அதேபோல் தீட்சிதர்கள் 150 பேரும் பங்கேற்றனர். உலக நன்மை வேண்டி இந்த பூஜைகள் நடைபெற்றது என்றனர்.
  Next Story
  ×