என் மலர்
வழிபாடு

பக்தர்கள் தங்க ரதத்தை வடம்பிடித்து இழுத்த காட்சி.
மேட்டுப்பாளையம் அருகே வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ரத சப்தமி விழா
மேட்டுப்பாளையம் அருகே வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ரதசப்தமி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தென் திருமலை யில் பக்தர்களால் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ரதசப்தமி விழா நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி சூரிய பிரபை புறப்பாடு, சேஷ வாகனம், அன்ன பட்சி வாகனம், அனுமந்த வாகனம், தங்கரதம், முத்துப்பந்தல் வாகனம், கருட சேவை மற்றும் சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி மேளதாளம் முழங்க மாடவீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
Next Story






