
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.
சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பக்தர்கள் முண்டியடித்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கிடையே பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரி, சென்னை, திருச்சி, கோவை, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.