search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர்
    X
    சிதம்பரம் நடராஜர்

    சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் தச தீர்த்தங்களில் இன்று நடக்கிறது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தச தீர்த்தங்களில் இன்று(திங்கட்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது.
    தை அமாவாசையையொட்டி உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரம் பகுதியில் உள்ள தச தீர்த்தங்களில் இன்று(திங்கட்கிழமை) தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று இரவு 11 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சுவாமி, நடராஜர் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவகங்கை குளத்துக்கு செல்கிறார்.

    அங்கு சந்திரசேகரர் முன்னிலையில் அஸ்திரராஜருக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து கிள்ளை கடற்கரை, அம்மாபேட்டை புலிமேடு தீர்த்த குளம், இளமையாக்கினார் கோவில் வியாக்ர தீர்த்தகுளம், அனந்தீஸ்வரர் கோவில் அனந்த தீர்த்தம், நாகசேரி குளத்தில் நாகசேரி தீர்த்தம், சிங்காரத்தோப்பில் பிரம்ம தீர்த்தம், தில்லையம்மன் கோவிலில் சிவப்ரியை தீர்த்தம், புதுத்தெரு பர்ணசாலையில் திருப்பாற்கடல் தீர்த்தம், நடராஜர் கோவில் சித்சபை அருகே உள்ள நடராஜர் அபிஷேக தீர்த்த கிணறு பரமானந்த கூடம் ஆகிய தீர்த்தங்களில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×