என் மலர்

  வழிபாடு

  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்
  X
  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்

  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தெப்ப உற்சவம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவசுப்பிரமணியசாமி கோவில் தெப்ப உற்சவம் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிகள் படி தண்ணீர் நிரம்பிய கொப்பரையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது.
  தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெற்றது. இந்த திருவிழா கொடியிறக்கம் மற்றும் பல்லக்கு உற்சவம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

  இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிகள் படி தண்ணீர் நிரம்பிய கொப்பரையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் சிவசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

  இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.
  Next Story
  ×