search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கோவில் வாசலில் தேங்காய் உடைத்து தீபமேற்றி வழிபடும் பக்தர்கள்.
    X
    கோவில் வாசலில் தேங்காய் உடைத்து தீபமேற்றி வழிபடும் பக்தர்கள்.

    சுவாமிமலை கோவில் வாசலில் தீபமேற்றி பக்தர்கள் தைப்பூச வழிபாடு

    இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூச தினமான இன்று முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.
    முருகனின் ஆறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகத் சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தைப்பூச திருவிழா பிரசித்தி பெற்றது. வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தரிசித்து செல்வர். பலர் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வருவர்.

    ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தைப்பூச தினமான இன்று முருகர் கோவில் உள்ளிட்ட அனைத்து மத வழிப்பாட்டு தலங்களும் மூடப்படும் என்று அரசு அறிவித்தது.

    அதன்படி இன்று சுவாமிமலை சுவாமிநாத சாமி கோவில் மூடப்பட்டிருந்தது. இருந்தாலும் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அதிகாலையில் இருந்தே கோவிலுக்கு வந்தனர். பலர் பாத யாத்திரையாக வந்திருந்தனர்.

    கோவில் மூடப்பட்டிருந்ததால் வாசல் முன்பு தீபங்கள் ஏற்றி தேங்காய் உடைத்து வழிபட்டனர். தங்களது நேர்த்திகடனையும் செலுத்தினர். அப்போது மனமுருகி முருகரை வழிப்பட்டனர். கொரோனா தொற்று முற்றிலும் நீங்க பிரார்த்தித்தனர்.

    தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு நின்று வழிப்பட்டு செல்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×