என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்
    X
    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம்

    கொரோனா தொற்று பரவி வருவதால் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் புஷ்யமி மாதம் பவுர்ணமி அன்று புஷ்யமி நட்சத்திரத்தன்று திருப்பதி ஏழுமலையான் அருகே ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நடப்பது வழக்கம். அங்கு திரளான பக்தர்கள் சென்று ராமகிருஷ்ண தீர்த்தத்தில் புனித நீராடி ராமச்சந்திரமூர்த்தி, கிருஷ்ணரை வழிபடுவார்கள்.

    தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால் ராமகிருஷ்ண தீர்த்த முக்கோட்டி உற்சவம் நேற்று பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. அங்குள்ள ராமச்சந்திரமூர்த்தி மற்றும் கிருஷ்ணர் உருவச்சிலைகளுக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பிற சுகந்த திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்புப்பூஜைகள் ெசய்து, நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×