search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கொடியேற்றம் நடைபெற்றதையும், சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.
    X
    கொடியேற்றம் நடைபெற்றதையும், சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும் படத்தில் காணலாம்.

    சிவசுப்பிரமணிய சாமி கோவில் கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது

    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றம் பக்தர்கள் இன்றி எளிமையாகநடந்தது.
    தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் ஆகம விதிகள்படி திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இந்த விழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடந்தது. பின்னர் கோவில் வளாகத்துக்குள் ஆட்டுக்கிடா வாகனத்தில் சாமி உற்சவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு புலி வாகன உற்சவம் நடந்தது.

    விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) நாகவாகன உற்சவம் கோவில் வளாகத்துக்குள்ளேயே நடக்கிறது. வருகிற 18-ந் தேதி தைப்பூச தினத்தன்றும் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கோவில் வளாகத்துக்குள் எளிமையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் சாமிக்கு சிறப்பு பால் அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு அலங்கார சேவை நடக்கிறது. இரவு சாமி திருக்கல்யாண உற்சவமும், பொன் மயில் வாகனத்தில் சாமி உற்சவமும் நடக்கிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் ரத்து செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி அறிவித்துள்ளார். இதனால் இந்த ஆண்டு தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை. ஆனால் ஆகம விதிகள்படி கோவில் வளாகத்துக்கு உள்ளேயே சாமி உற்சவம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதேபோன்று தேரோட்டத்தின் போது நடைபெறும் சிற்றுண்டி மற்றும் அன்னதானம் வழங்கும் விழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வருகிற 21-ந் தேதி வேடர்பறி உற்சவமும், 22-ந் தேதி பூப்பல்லக்கு உற்சவமும், 23-ந் தேதி சயன உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை செங்குந்தர் சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×