என் மலர்

  வழிபாடு

  நம்பெருமாள் சேஷ வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளிய காட்சி.
  X
  நம்பெருமாள் சேஷ வாகனத்திலும், அனுமந்த வாகனத்திலும் எழுந்தருளிய காட்சி.

  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டமின்றி உற்சவம் நடத்த அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.
  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதித் திருநாள் எனப்படும் தைத்தேர் உற்சவம் கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த உற்சவம் வருகிற 19-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தைத்தேரோட்ட உற்சவத்தையொட்டி தினமும் காலையும், மாலையும் நம்பெருமாள் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி உத்திரை வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

  ஆனால் தற்போது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருகின்றன.

  தைத்தேர் உற்சவத்தின் 9-ம் நாளான வருகிற 17-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான தைத் தேரோட்டம் நடைபெற வேண்டும். ஆனால் தற்போது அனைத்து உற்சவங்களும் கோவில் வளாகத்திலேயே நடைபெற்று வருவதால் தேரோட்ட தினத்தன்று மட்டும் நம்பெருமாள், உபய நாச்சியார்களுடன் சிறிதுநேரம் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்க அனுமதி கோரி கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

  இந்நிலையில் தேரோட்ட தினமான வருகிற 17-ந் தேதியன்று காலை 4.30 மணி முதல் காலை 5 மணிக்குள் நம்பெருமாளை, உபய நாச்சியார்களுடன் தேரில் எழுந்தருள செய்து தேரோட்டம் இல்லாமல் நிலைத்தேராக உற்சவத்தை நடத்தவும், மேலும் இந்த உற்சவத்தில் 50 பேருக்கு மிகாமல், ஆகம விதிப்படி பக்தர்களுக்கு அனுமதி இன்றி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து தைத்தேர் உற்சவத்தை நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
  Next Story
  ×