search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருமால் அருளிய வைகுண்ட பதவி
    X
    திருமால் அருளிய வைகுண்ட பதவி

    திருமால் அருளிய வைகுண்ட பதவி

    மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என வைணவர்கள் நம்புகின்றனர்.
    மார்கழி மாத சுக்கில பட்ச (வளர்பிறை) ஏகாதசி வைகுண்ட ஏகாதசி எனப்படுகி து. இந்து சமயத்தவர்களில் வைணவர்கள் வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து திருமாலை வழிபடுகின்றனர். மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம் என்பது திருமால் வாக்கு என அவர்கள் நம்புகின்றனர்.

    கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் என்னும் பதினொரு இந்திரியங்களால் செய்யப்ப டும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் விரதம் இருந்தால் அழிந்து விடும் என்பது நம்பிக்கை. ஏகாதசியன்று பகல் உறக்கம், இருவேளை சாப்பிடுதல், உடலுறவு என்பவற்றை தவிர்த்து விரதம் மேற்கொள்கின்றனர். ஏகாதசியன்று இந்து சமயத்தவர்கள் திருமண நிகழ்வுகளையும் தவிர்க்கின்றனர்.

    Next Story
    ×