என் மலர்

  வழிபாடு

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்
  X
  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்

  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று நள்ளிரவு பக்தர்களுக்கு தடை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாளை (13-ந்தேதி) வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  சென்னை :

  சென்னை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  * இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை.

  * நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

  * வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலைய துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள்.

  * முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை.

  * சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும்.

  * 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதயநோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் உடல் நலன் கருதி தரிசனத்திற்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  * பக்தர்கள் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய வேண்டும். பக்தர்களின் உடல் வெப்பநிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்புதான் கோயில் உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவர்.

  * 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  இதையும் படிக்கலாம்....பழனி கோவிலில் 14-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை
  Next Story
  ×