என் மலர்

  வழிபாடு

  உற்சவர் பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
  X
  உற்சவர் பொன்னாலம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

  ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீகாளஹஸ்தியில் ஏழு கங்கையம்மன் திருவிழா நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பக்தர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
  ஸ்ரீகாளஹஸ்தி நகரில் பிரசித்திப் பெற்ற கங்கையம்மன் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கங்கையம்மனுக்கு திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நேற்று நடந்தது.

  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் திருக்கல்யாண மண்டபம் அருகில் அங்காளம்மன், பேரிவாரி மண்டபம் அருகில் முத்து மாரியம்மன், சிவன் கோவில் ராஜகோபுரம் அருகில் பொன்னாலம்மன், சன்னதி வீதி அருகில் கருப்பு கங்கையம்மன், காந்தி வீதியில் செங்காளம்மன், கொத்தப்பேட்டையில் புவனேஸ்வரியம்மன், ஜெயராம்ராவ் தெருவில் ரேணுகாம்பாள் போன்ற அலங்காரத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

  ஏழு பகுதியிலும் தனித்தனி கமிட்டி அமைத்து கங்கையம்மன்களுக்கு பல வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஒருசில பக்தர்கள் கோழி, ஆடு ஆகியவற்றை பலியிட்டு தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

  விழாவையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி துணை போலீஸ் சூப்பிரண்டு விஸ்வநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

  கங்கையம்மன் திருவிழாவையொட்டி திருப்பதி, நெல்லூரில் இருந்து ஸ்ரீகாளஹஸ்திக்கு வந்த பஸ்கள் பைபாஸ் வழியாக ஸ்ரீகாளஹஸ்தி பஸ் நிலையத்துக்கு திருப்பி விடப்பட்டன.
  Next Story
  ×