என் மலர்

  வழிபாடு

  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரசாமி.
  X
  சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரசாமி.

  சீனிவாசமங்காபுரம் கோவிலில் கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடந்தது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.
  திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் நேற்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி கொரோனா

  விதிமுறைகளை கடைப்பிடித்து தனிமையில் நடத்தப்பட்டது. அதில் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

  உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரசாமிக்கு கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் மஞ்சள், குங்குமம், பால், தயிர், தேன்,

  சந்தனம், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதன் பிறகு வனபோஜன நிகழ்ச்சி, ஆஸ்தானம் நடந்தது. அப்போது

  நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓரிரு பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

  நிகழ்ச்சியில் கோவில் துணை அதிகாரி சாந்தி, கண்காணிப்பாளர் ரமணய்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Next Story
  ×